Wednesday, 9 March 2016

வணக்கம் சகோதரி இளமதி

வணக்கம் சகோதரி இளமதி -----------------------------------------------------

எனது ஒரு கோப்பை மனிதம் நூலுக்கு அணிந்துரை நீங்கள் எழுதித்தந்தால் சிறப்பாக இருக்கும் முடியுமாம்மா...என்று நான் கேட்ட பொழுது ,கொஞ்சம் அவசரமா இருக்கேன்மா...வீட்டுக்கு வந்து விட்டு பேசவா என்றார்...ஓகேமா என்றேன்.

 மாலையில் அவரிடமிருந்து வந்த செய்தியில் நீங்கள் அழைத்த போது என் கணவருக்கு மிகவும் முடியாமல் மருத்துவமனையில் இருந்தேன்மா அதான் உடனே பேச முடியவில்லை என்ற போது சிரமம் கொடுத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன். இந்நிலையில் என்னால் அணிந்துரை எழுதி தரவியலாது என மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.பரவால்லமா நீங்கள் கணவரின் உடல் நிலையைப்பாருங்கள் என்றேன்.

 அவர்களின் ilayanila16.blogspot.com வலைப்பூ கண்கவரும் செய்திகளை,கவிதைகளை,ஓவியங்களை,கைவினைக்கலையை தாங்கி வரும் அழகான வலைப்பூ. இத்தகைய சிரமத்திற்கிடையேதான்கவிஞர் கி. பாரதிதாசன் அய்யாவிடம் தமிழ் செய்யுள் எழுதும் முறைகற்று மரபு பாக்களை அருமையாக எழுதி வருபவர்.

 பல வருடங்களாக விபத்து ஒன்றில் அடிபட்டு கோமாவில் இருந்த கணவரை எப்படியும் பிழைக்க வைத்துவிட வேண்டும் என்ற வைராக்யத்தோடு வாழ்ந்த வரும் வீரப்பெண்மணி...
 இவருக்கு உறுதுணையாக இருந்த அன்னையையும் இழந்து துக்கத்தோடு, சோதனைகள் நல்லவர்களுக்கு தான் அடிக்கடி வரும் போல...அவருக்கும் முடியாமல் போன நிலையிலும் தன் கணவரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்த இளையநிலா என்ற இளமதி..

இன்று தன் கணவரை இழந்து நிற்பது மனதை கனக்கச்செய்கின்றது... கலங்காதே சகோதரி ... இவ்வேதனையில் இருந்து அவர்கள் மீண்டு வர காலம் துணை செய்யட்டும்....

25 comments:

  1. வணக்கம் சகோ சகோதரி இளமதி அவர்களுக்கு இதை தாங்கும் வல்லமையை படைத்தவன் அருளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்வதுன்னு தெரியல சகோ...மனம் கனமாய்...

      Delete
  2. சகோதரியின் மனம் அமைதியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. விரைவில் மீண்டெழட்டும் அவர்கள்.

      Delete
  3. இதனை தாங்கும் வலிமையை இறைவன் வழங்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த இறைவன் இத்த்னை வலியை அவர்களுக்கு தந்திருக்கலாமா...அப்படி தந்தால் அது இறைவனான்னு சந்தேகம் வருது.

      Delete
  4. என் ஆழ்ந்த இரங்கல்கள்..

    ReplyDelete
  5. இளமதி அவர்கள் மன ஆறுதல் அடைய இறைவன் அவர்கள் அருள்புரிய வேண்டும்.
    நீங்கள் சொல்வது போல் காலம் தான் அவர்கள் மனபுண்ணை ஆற்றும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மா..விரைவில் தேறட்டும்.

      Delete
  6. நமது அன்புச் சகோதரி இளமதியின் துயரத்தில் பங்கேற்போம் கீதா! சரியான நேரத்தில் நண்பர் கில்லர்ஜி பதிவிட்டிருந்தார். நான் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் நீங்கள் எழுதியது கண்டு நெகிழ்கிறேன். ஏதோ நம் புதுக்கோட்டையில் வாழும் நம் சகோதரியின் துயரம் போல நெஞ்சு பதறுகிறது. நீங்கள் எழுதியிருப்பது போல, “சோதனைகள் நல்லவர்களுக்கு தான் அடிக்கடி வரும் போல...” என்பது தான் இவ்வுலகின் நகைமுரண்! அவர் வாழ்வில் எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பணியாற்றினார்! இனியும் பணிகளைத் தொடர, நிதி உதவி தேவைப்படுமானால் நம் பதிவுலக நண்பர்கள் இணைந்து அவருக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். நேரில் பேசுவோம்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கடைசி குறிப்பு நன்று செய்வோம்.

      Delete
    2. நிச்சயம் அவருக்கு பக்கபலமாய் இருப்போம் அண்ணா.

      Delete
  7. இறைவா என்ன சோதனை ...
    உனக்கு பிடித்தவர் உன்
    பக்கத்தில் இருக்க வேண்டுமோ...

    ReplyDelete
  8. இதுபோன்ற எழுத்துக்களால் அவரது மனதிற்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. மனதை வேறு வழியில் மாற்றி தெளிய வேண்டும் அய்யா.

      Delete
  9. என் ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருத்தமான நிகழ்வு,....மனதை மிகவும் பாதிக்கின்றது..பா

      Delete
  10. ஆம் சகோ நீங்கள், மற்றும் கஸ்தூரி சொல்லியிருக்கும் அனைத்தும் பொருந்து அவர்களுக்கு. அவர்களுடன் நான் அனைவரும் துணை நிற்போம். எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்...அவர் மீண்டும் வலைப்பக்கம் உறுதியோடு வர வேண்டும்.அந்தத் தமிழ் அவரை வேதனையிலிருந்து மீட்டு வரும் என்று நம்புவோம். வருவார் நாமும் அவருக்கு அந்த உறுதி அளிப்போம்...

    வேதனையுடன்..

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவர் விழாவிற்கு இத்தனை சிரமங்களுக்கிடையேயும் ரூ10000 அனுப்பியை நினைக்கையில் மனம் நெகிழ்கின்றது சகோ..

      Delete
  11. மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அவர் மீண்டும் உறுதியோடு மீண்டு வர கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் விரைவில் மீள்வார்மா.

      Delete
  12. அவர் மனம் அமைதியாகனும்,, அவர் மீண்டும் வலைப்பக்கம் வரனும்,,

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு ஆறுதலே வலைப்பக்கம் தான்மா..வரட்டும் விரைவில்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...