Friday, 5 February 2016

குமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா?

குமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா?

எப்போதும் ஒரு தலைமுறை அடுத்ததலைமுறையை குறைக்கூறிக்கொண்டே வாழ்கின்றது...

நம்மையும் இப்படித்தான் இதுங்க பொறுப்பில்லாம இருக்குது எங்க விளங்கப்போகுதுன்னு திட்டியவர்கள் வியக்கும்படி முன்னேறியவர்கள் ஏராளம்...

ஏன் குமரப்பருவத்தைக்கடந்து வந்தும் நாம் அவ்வயதினரைப்புரிந்து கொள்ளாமல் குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டும்....

அவ்வயதிற்கே உரிய வேகத்தை,எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ,நேர்மையை நோக்கிச்செல்லும் பண்பை உணர மறுக்கின்றோம்...

குழந்தைகள் நல்லவர்களாகவே தான் பிறக்கின்றார்கள்...சமூகம் தான் அவர்களின் சீர்கேட்டிற்கு காரணம் எனத்தெரிந்தும் அவர்களை ஏற்க மறுப்பது ஏன்?

7 comments:

  1. நல்ல முயற்சி. விவாதங்கள் தொடரட்டும். அனைவரின் ஆரோக்யமான கருத்துக்களையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே
    அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. முக்கியமான விஷயமிது. கல்வித்துறை கவனம்பெறாத, கவனித்தே ஆகவேண்டிய குறிப்பை முன்வைத்திருக்கிறீர்கள்... வெறும் பாடம் சொல்லித்தரும் இடமாக இருக்கும் பள்ளிகளை அவர்களின் உளவியல்சார்ந்த குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் இடமாகவும் மாற்றினாலன்றி அவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது. நல்ல விவாதத்தைக் கிளப்பியிருக்கிறீர்கள். எனது “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!-பகுதி-2”இன் கருப்பொருளும் இதுதுான். பாராட்டுகள் த.ம.2

    ReplyDelete
  4. உண்மை கீதா. குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டு வழி நடத்தினாலே அருமையான இளைய சமுதாயம் உருவாகும். ஏனோ அதைச் செய்ய மறுக்கிறோம்

    ReplyDelete
  5. முக்கியமான விஷயம் இது. பலருக்கும் இதில் புரிதல் இல்லை. தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. பிள்ளைகளை
    பிள்ளைகளாய் எண்ணாமல்
    நண்பர்களாய் ஏற்போம்

    ReplyDelete
  7. மிகவும் அவசியமான ஒன்று. புரிதல் இல்லாமையே காரணம்...எல்லா குழந்தைகளுமே நல்ல குழந்தைகள்தான். பரம்பரை ஜீன் என்பது ஒரு காரணம் என்றாலும், பெரும்பாலும் வளரும் சூழலே. இதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் தனித் தொடர்பதிவு எழுத வேண்டும். அத்தனைக்கு விஷயங்கள் இருக்கின்றன...புரிதல் இருந்தால் நல்லதொரு சமுதாயம் உருவாகும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...