Monday, 29 February 2016

ஆரஞ்சு வண்ணத்தது

தோன்றியது முதல் அவளுக்காகவே காத்திருந்த
பிங்க் கலரை விடுத்து
ஆரஞ்சை தேர்வு செய்தாள்
குதூகாத்துலத்துடன் ஆரஞ்ச் மகிழ
கலங்கி நின்றது பிங்க் .

கூடவே வந்த ஆரஞ்சு நிறத்ததுவை கொஞ்சினாள்...
தடவித்தடவி மகிந்தாள்..குட்டிமா.
 அவளுடன் துள்ளலுடன் வீடு வந்தது
வீட்டின் மகிழ்வைக்கூட்டி
அவளுடனே விளையாடியது...

 இரவு தூங்கும் முன்
 காற்றுனக்கு ஆகாதெனக்கூறி
காற்றில்லா அறையில் வைத்தவளை
 நடுஇரவில் கதவின் வழி வந்த
 காற்றின் துணையால்
அவளை மெல்ல எட்டிப்பார்த்து குதித்தது.
அம்மம்மாவுடனான போட்டியில்
அவளே வெல்லத்துடித்தது...


குட்டிமாவின் கைப்படும் போதெல்லாம்
கீறீச்சிடும் கதவென
சத்தமிட்டு கொண்டாடியது..
 போட்டியில் வெல்ல ஆரஞ்சை
போர்டிக்கோவில் வைத்து
இங்கயே இரு என்று உள்ளே நுழைந்தவளின்
 பிரிவு தாளாமல் வெடித்து சிதறியது
ஆரஞ்சு வண்ணத்தது....

7 comments:

  1. அதிசயமா இன்று நான் ஒரு பிங்கே..கவிதை எழுதினேன்...இங்கு ஆரஞ்சு...
    அடடா...அருமை...

    ReplyDelete
  2. அழகான அருமையான வரிகள்.....

    ReplyDelete
  3. அருமை
    அருமை சகோதரியாரே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...