Saturday, 28 November 2015

குழந்தைநேயப்பள்ளி -மண்டல அளவிலான கலந்துரையாடல்

சமூகக் கல்வி நிறுவனமும் ,யூனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்திய..

குழந்தைநேயப்பள்ளி -மண்டல அளவிலான கலந்துரையாடல்



இடம்-தஞ்சை
நாள்-28.11.15

இன்று தஞ்சையில் குழந்தைநேயப்பள்ளியை உருவாக்குவது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமிகு மணிமாறன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்....அவருடன் சமூகக்கல்வி நிறுவனத்தைச்சேர்ந்த ஷ்யாம் சுந்தர்,வானதி பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சேர்ந்து நிகழ்வை முறைப்படுத்தினர்...

கல்வியாளர்களும்,ஆசிரியர்களும்,குழந்தை நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்களும்,கலந்து கொண்டு நிகழ்ச்சியைச்சிறப்பித்தனர்...

நிகழ்ச்சிக்கு புதுகையிலிருந்து 5 பேர் கலந்து கொண்டோம்...எங்களை அழைத்து சென்ற புதுகை செல்வா,உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயா,ஆசிரியர்கள் ராஜேஸ்வரி மற்றும் ஷமீம் ஆகியோருடன் நானும்






சமூக உணர்வாளரும் ,நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரருமான திருமிகு இரா.எட்வின் அவர்கள் தலைமை தாங்கி குழந்தைகளைக்கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



குழந்தைமையை உணர்ந்தவர்கள் கூடிய நிகழ்வில் மாவட்ட ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்....ஆடிப்பாடியது மறக்கவியலா ஒன்று....இந்த எளிமையே குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்றாகிறது..

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாடியதும்,குழந்தைகள் விரும்பும் செயலுக்கு உதாரணம் காட்டியதும் மிகச்சிறப்பாக இருந்தது...

ஆசிரியர்களுக்கு முன்னோடியாகவும்,எடுத்துக்காட்டாகவும் திகழும் கீச்சாங்குளத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் திருமிகு. பாலு மற்றும் நெடுவாசல் பள்ளித்தலைமையாசிரியர் திருமிகு.கருப்பையா ஆகியோரின் அனுபவங்கள்...அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றன....

ஒருகிராமத்தையே தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர் திருமிகு ஆனந்த்...பாராட்டுக்குரியவர்..

ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தந்தது...






மாற்றத்தை நோக்கிய பாதையில் ஆசிரியர்கள் அடி எடுத்து வைத்துள்ளனர்....சிறிய அளவிலான ஆசிரியர்கள், பெருந்திரளான ஆசிரியர்கள் மனதில் குழந்தை நேயப்பள்ளியின் முக்கியத்துவத்தை விதைக்க இந்நிகழ்ச்சி காரணமாக இருக்கப்போவதை உணர முடிந்தது...

விரைவில் குழந்தைகட்கு தேவையான தரமான கல்வி கிடைக்க,தாய்வழிக்கல்வியை முன்னிறுத்தி ,அரசுப்பள்ளிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

விகடனில் பார்த்த பல முகங்களை நேரில் கண்டதில் மன நிறைவே..அதிலும் மகள் வானதியை சந்தித்து மறக்க முடியாத ஒன்று.

இவ்வாய்ப்பை தந்த புதுகை செல்வா சாருக்கும்,எனக்காக வந்து எங்களை அழைத்து சென்ற சகோதரி ஜெயாவிற்கும் நன்றி கூறவில்லை ,மனம் நிறைந்த மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றேன்..

7 comments:

  1. சிறப்பானதோர் நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி, நல்ல பகிர்வு. திரு இரா.எட்வினைக் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  4. ஊதி வைப்போம் கீதா

    ReplyDelete
  5. மிக மிக சிறப்பான நிகழ்வு சகோ! நல்ல முயற்சி...விதை விதைத்தாயிற்று இல்லையா....அருமை

    ReplyDelete
  6. இதுபோன்ற பயிற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகும் சூழலில் உங்கள் கலந்துரையாடல் பயன்படும் வண்ணம் அமைந்தது குறித்து மகிழ்ச்சி.
    தொடர்கிறேன் கவிஞரே!

    நன்றி

    ReplyDelete
  7. வழிமாறிப்போக ஏராளமான வாய்ப்பிருக்கும் சூழலில் வளரிளம் தலைமுறையை சரியான வழிகாட்டலுடன் முன்னடத்திச்செல்ல முனையும் நல்லுள்ளங்களுக்கு அன்பும் பாராட்டுகளும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...