Thursday, 12 November 2015

கடவுளைக்கண்டேன்..2

                                     

                                 
                                 நம்ம சகோ கில்லர்ஜிக்கு நகச்சுத்தி வந்தாலும் வந்தது...அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு மருத்துவர்கள் முழிக்க,.....

                சைடு கேப்ல இவரு சொர்க்கலோகம்?![அங்கேயா போவாரு...கில்லர்ஜின்னு பேர வச்சுக்கிட்டு]போயியியி..கடவுளைப்பார்க்க ,அந்தக்கடவுளோ பாவம் இவரோட வேண்டுதல்களையே நிறைவேற்ற முடியாது..பின்ன இந்தியாவுல மதம் ஜாதிங்குற வார்த்தையே இல்லை சொன்னா செயிலுன்னு சொல்ல கடவுளு தலையில கைய வச்சுக்கிட்டு...இந்தப்படுபாவிய பிடிக்க முடியாது போலன்னு அவரு ஒரு பந்தயம் வைக்க....
               சொர்க்கத்துலேர்ந்து என்னைப் பார்த்து...மாட்டிவிட்ட சகோவ என்ன பண்ணலாம்...இருக்கட்டும் எப்படியும் ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் போது கவனிச்சுக்கலாம்...இப்ப கடவுள பார்க்கலாம்னு  நினைச்ச உடனே விஷ்க்னு சொர்க்கத்துல நானு... கள்ளச்சிரிப்போட நம்ம சகோ கில்லர்ஜி....

                             பக்கத்துல அநியாயத்துக்கு அணிகலன்களோட வரிசையா எல்லா மதக்கடவுளும்....உட்கார்ந்துருக்காக...யாரப்பாத்து கேக்கலாம்னு போனா ...எதுக்கு வம்பு மொத்தக்கடவுள்களையும் ஒரே சமயத்துல பார்த்து கேட்டுடலாம்னு ..முடிவு பண்ணேன்...

ம்ம் கூறும் உமது ஆசைகளைன்னு திருவிளையாடல்ல வர்ற சிவபெருமான் சிவாஜி ஸ்டைலில் எல்லோரும் கேட்க...

எல்லாத்தையும் நிறைவேத்துவீகளான்னு வழக்கம் போல கிராஸ் கேள்வி கேட்க ....ம்ம்ம்ம்ம்னு உருமிவிட்டு கேளும் கேளும் கேட்டுப்பாரும்னு அதட்ட...அய்யோடான்னு பயந்துகிட்டே கேட்க ஆரம்பித்தேன்..

1]நிசமாவே பூமியில இத்ன கடவுள்  இருந்தும் நடக்குற அநியாயத்த யாரும் கேக்கலயே இனி ஒரு கடவுளாவது கேட்பீகளா?..

2]மனுசனுக்கு ஆறறிவு வேண்டாம் ஐந்தறிவே போதும்ஆறாவது அறிவ அழிக்க முடியுமாக்கடவுளே...,அத வச்சுக்கிட்டு இவன் படுத்துற பாடு தாங்க முடியல...

3]பெண்களைக்குறை சொல்லாத...இருங்க இருங்க பெண்கள் குறை சொல்லும் படி நடக்காத ஆண்களைப்படைப்பீர்களா..சாமி..

4]நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து நம்ம சரத்குமாரு ஸ்டைல நிறுத்துறா சண்டைய...எல்லா மதமும் ஒண்ணுதாண்டா...மனுசனப் பிரிச்சவன வெட்டுறான்னு சொல்லோனும் முடியுமா,...?

5]எத்தன முறை சின்ன வயசுல உங்கள சுத்திசுத்தி வந்து எல்லாரும் நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்...ஆனா என்ன மட்டும் நல்லா வைக்காத உங்களுக்கு தண்டனைக் கொடுக்க ஆசைப்படுறேன் முடியுமா சாமி?இல்ல இழந்து போன என் மகிழ்ச்சியெல்லாம் திருப்பி கொடுத்துடுங்க.....எலுமிச்சம்பழ விளக்கே ஆயிரக்கணக்குல ஏத்தியிருக்கேன் ..கொஞ்சம் கூட கருணை காட்டலியே பா...

6]இந்தியா கடன்ல இருக்கு உங்க பக்கத்துல இருக்குற  திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு ஆயிரம் கோடிக்கணக்குல நகை இருக்குன்றாக....கொஞ்சம் இரக்கப்பட்டு இந்தியாவோட கடனை அடைக்க சொல்லிடுங்க சாமி...


7]கண்டங்கள் எல்லாத்தையும் முடிஞ்சா ஒண்ணா  இணைச்சு இந்த அயல்நாட்டுக்காரங்ககிட்டஇருந்து, ஆமா சாமி ஆ ஊ ன்னா  எல்லைத்தாண்டினேன்னு பிடிச்சுட்டு போயி கொடுமைப்படுத்துறாய்ங்க....ஒண்ணா சேர்த்தாச்சுன்னா இந்த பிரச்சனையே இல்லல்ல...இந்தியாவ குப்பை கொட்டுற நாடா எந்த நாடும் நினைக்காதுல்ல..கொஞ்சம் காதக்கொடுங்க[ நம்ம பிரதமருக்கு அயல்நாட்டுலேயே இருக்காருன்னு கெட்டப்பேரு மாறிடும்ல...]


8]காலக்கடிகாரம் இருந்தா ஒரே சுத்தா சுத்தி என்ன சின்ன வயசுல கொண்டி உட்டுறுக அட எல்லாரையும் தான்....செய்த தப்பயெல்லாம் செய்யமாட்டோம்ல...ஆனா புதுசா தப்பு பண்றத தடுக்க முடியாது சாமி..

9]கொஞ்ச நாளைக்கு பணக்காரர்கள்டேருந்து எல்லாத்தையும் புடுங்கி வறுமையில் வாடும் ஏழைகளிடம் கொடுத்துடுங்க..கஷ்டம்னா என்னன்னு அவங்களும் உணரட்டும் என்ன நாஞ் சொல்றது...அதுக்குள்ள கன்னத்துல கைய வச்சுக்கிட்டா என்ன பண்றது சாமியோவ்...


10]பேசாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து மனுசப்பயல்க கிட்ட நாங்க எல்லாம் ஒரே உருவம் தான் இனி நீங்க அடிக்கிட்டா யாரு காரணமோ அவங்களுக்கு எண்ணெய்க்கொப்பரைதான்னு நேர்ல வந்து சொல்லிட்டு போயிடுங்க சாமிகளா..என்னோட இந்த சின்ன ஆசையெல்லாம் நிறைவேத்திட்டீகன்னா...தந்தை பெரியாரே நேர்ல வந்து நீங்க இருக்கீங்கன்னு சொல்லவச்சுடுறேன் சாமியோவ்..



அய்யோடா ஏனிப்படி சாமியெல்லாம் ஓடுறாங்கன்னு  தெரியலயே...

இன்னும் பத்து பேரு ஆசையக்கேட்போமா..யாரப்புடிக்கலாங்கோ

  1] அன்பு அண்ணன் முத்துநிலவன்
    http://valarumkavithai.blogspot.com


2]அன்பு சகோதரி கீதமஞ்சரி
           http://geethamanjari.blogspot.in

3]அன்புசகோதரர் தளிர்சுரேஷ்
          http://thalirssb.blogspot.com

  4]நம்ம தம்பி கஸ்தூரி
      http://www.malartharu.org

5]அன்புச்சகோதரி இளையநிலா
   http://ilayanila16.blogspot.com

6]அன்புத்தோழி தென்றல் சசிகலா
  http://veesuthendral.blogspot.in

7]அன்புத்தோழர் ஜோக்காளி
  http://www.jokkaali.in

8]அன்புச்சகோதரி மாலதி
http://malathik886.blogspot.in

9]உணர்வான தோழியும் சகோதரியும் ஆன ஜெயா
  http://jayalakshmiaeo.blogspot.in

10]கொடுத்து சிவந்த கரங்களை உடைய நம்ம விசு ஆசம் சார்
http://vishcornelius.blogspot.com


அப்பாடி ஒருவழியா இவங்க கிட்ட ஒப்படைச்சாச்சு இனி கில்லர்ஜி பிழைப்பது இவர்கள் கையில் கொஞ்சம் பார்த்து ஆசைய சொல்லுங்க எல்லாரும்...


32 comments:

  1. ஆகா
    அற்புதமாய் ஆசைகளைஇறக்கி வைத்துவிட்டீர்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா உங்க பதிவ பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...அண்னா..

      Delete
  2. அடியாத்தீ........? என்னாவேகம் அதுக்குள்ளே பதிவு போட்டீங்களே... ஸூப்பர் சகோ கடவுள் இருக்காரா .? ஓடிட்டாரா .? இப்படிக்கேட்டால் அவர் எப்பூடி........
    மிக்க நன்றி சகோ வாழ்த்துகளுடன்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள படிச்சாச்சா...என்னையும் இப்படி எழுத வைத்தமைக்கு நன்றி சொல்லமாட்டேன்..சகோ..

      Delete
  3. 10 padithen. 1-4 pidithathu madam.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பா...என்ன வேகம்...?போட்டது படித்து விட்டீர்கள்..

      Delete
  4. ம்ம்ம்... நல்ல கேள்விகள். தொடரில் என்னென்ன கேள்விகள் வரப் போகிறது எனப் பார்க்கும் ஆவலுடன் நானும்.....

    ReplyDelete
  5. நானும் ஆவலுடன் சார்...நன்றி.

    ReplyDelete
  6. தங்களின் ஆசைகளை படித்தேன். அது ஆசைகள் அல்ல. பேராசைகள். என்னையும் இணைத்ததற்கு நன்றி. ஆனால் ஒரு விடயம் பாருங்கள். எனக்கு இந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை. ஆசையே அழிவிற்கு காரணம் என்பதை அறிந்தவன் நான்.

    ReplyDelete
    Replies
    1. எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க என் ஆசைகள் ஆனது..சார்..இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது....சார்..

      Delete
  7. நம்ப கில்லர்ஜிக்கு கடவுள் நகசுத்தியைக் கொடுத்தாலும் கொடுத்தார், கில்லர்ஜி சாமர்த்தியமாக கடவுளுக்கு எதிராக பத்து பத்து பேராக மனுக்களை கொடுக்க வைத்து விட்டார். உங்கள் பத்து மனதைத் தொட்டன. கடவுளும் என்னதான் பண்ணுவார் என்று பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் பாவம் கடவுள்...பார்ப்போம்..சார்.

      Delete
  8. என்ன வேகம்! என்ன வேகம்! ஐயோ..எனக்கு ஒரு ஆசையும் தோண மாட்டேங்குதே...தாமதமானா பத்துப்பேர பிடிக்கிறது கஷ்டம்...அதுக்கும் மேல ஆசையைச் சொல்ல கடவுளையும் தேடவேண்டியிருக்கும் போல ..
    //வேற தப்பு பண்றது தடுக்க முடியாது// வச்சீங்க பாருங்க ஆப்பு! :)
    த.ம +1

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மா 10 பிடிக்கிறது என்பது சிரமமாத்தான் இருக்கு..தமிழிளங்கோ சார்,செல்வகுமார் சார் எல்லாம் ப்ரீதான் புடிங்க சீக்கிரமா..

      Delete
  9. நல்லாவே நறுக் சுருக்கென்று கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கிறீர்கள் கீதா... ஆனால் ஆசாமிகள் செய்யும் அட்டூழியத்துக்கும் அட்டகாசத்துக்கும் சாமிகள் என்ன செய்யும்... உலகின் அராஜகங்களைக் கண்டு பொங்கும் உள்ளங்கள் கேட்க நினைத்த அத்தனைக் கேள்விகளையும் நீங்களே கேட்டுவிட்டீங்க.. இனி நான் கேட்க என்ன இருக்கிறது? :)) அழகான தொகுப்பு கீதா.. தொடர்பதிவாளர்களுள் ஒருவராக என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. முயற்சி செய்கிறேன் தோழி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசைகளைக்காண ஆவலாக உள்ளேன்மா...

      Delete
  10. வணக்கம்
    மீண்டும்கலகலப்பு பதிவா.. வலைப்பதிவர்களுக்கு ஒரு உச்சாகம்... கொடுக்கும் பதிவு... தங்களின் ஆசைகளை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள். த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  11. பத்து(ம்) முத்தான ஆசைகள்...

    ReplyDelete
    Replies
    1. அத்தனையும் நிறைவேற உங்கள் வாழ்த்துகள்..தேவை சார்..

      Delete
  12. நானொரு இறை மறுப்பாளன்,யாரிடம் போய் சொல்லுவேன் பத்து ஆசைகளை :)

    ReplyDelete
    Replies
    1. நானும் தான்....சார் சொல்லுங்கள்...மிக்கநன்றி..

      Delete
  13. நல்லாவே ஓட்டம் பிடிச்சிருப்பாரு கடவுள்! சிறப்பான ஆசைகள்! என்னையும் கோர்த்துவிட்டிருக்கிறீர்கள் போல! முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சகோ..

      Delete
  14. கடவுள் வந்து எல்லா பதிவர்களின் ஆசைகளையும் படித்து "ததாஸ்து" சொல்லி விடவ்ண்டும் என்பதே என் முதல் ஆசை!
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நடக்கட்டும் சார்..நன்றி..

      Delete
  15. கில்லர்ஜி ஆரம்பித்த தொடரைத் தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. பணிச்சூழல் காரணமாக நான் தொடர்வதில் தாமதமாகிறது. முயற்சிக்கிறேன். மற்றொரு செய்தி. அறிமுகமாகின்றவர், அறிமுகப்படுத்தப்படுபவர், அறிமுகப்படுத்தப்படும் தளம் என்ற அனைத்து நிலைகளும் சிறப்பாக அமையும்வகையில் நந்தலாலா மூலமாக பதிவர்களை அறிமுகப்படுத்தும் தங்கள் முயற்சி பல்லாற்றானும் சிறப்புற அமைய வாழ்த்துகள். நன்றி. 

    ReplyDelete
  16. ”இவுங்களையெல்லாம் இப்படித்தான் இழுத்துக்கொண்டுவரவேண்டியுள்ளது”என்று உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கே, எனக்குமட்டும் கேட்கிறதுதோழி,நாளைஎனது10 ஆசைகளையும்
    எனதுவலைப்பூவில் ”எழுதுகிறேன்.பார்க்கவில்லைஎன நேரில் பார்த்தபோது நேற்று சொன்னதை இன்று பார்த்து,நாளைக்குத்தானா?”இப்பயு கேட்டுச்சு.சாரி.............);):):

    ReplyDelete
  17. கில்லர்ஜி எழுப்பிவிட்டாலும் விட்டார்...சகோ எல்லோரது ஆசைகளும் கிட்டத்தட்ட பேராசைகள்தாம்..ஹஹஹ் ஆனால் அவை நிறைவேறினால் ஏதேனும் ஒன்று நிறைவேறினால் கூட மகிழ்வே...இல்லையா சகோ....பதிவு அருமை...

    ReplyDelete
  18. உடல்நிலையும் நேரக்குழப்பத்தால் மனநிலையும் சரியில்லாத போதும் உங்கள் அன்பின் காரணமாகவும், தனியஞ்சல் தந்து நினைவுபடுத்திய மைதிலியாலுமே இதை நான் தொடர்ந்தேன் தங்கையே! உஙகள் பதில்கள் அருமை. எடடாம் ஆசை உட்பட ஆங்காங்கே தலைகாட்டிய குறும்பை ரசித்தேன். நல்ல தொடர்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...