Thursday, 29 October 2015

தூங்காத கண்ணென்று...ஒன்று

தூங்காத கண்ணென்று...ஒன்று

கைநிறைய அள்ளிய நீரால்
குளிக்கவைத்து
சோப்பு போட்டு
எரியும் கண்களை உச்சுகொட்டி
துடைத்து நீர்விட்டு அலசி
அழுகாமல் ஆசுவாசப்படுத்தி
துண்டெடுத்து துடைத்து
பவுடர் தடவி
பொட்டு வைத்து
எங்கசிரி என்கிறாள்
சின்னக்கண்ணம்மா
உறங்கவைக்க முயன்றவளிடம்
உதட்டை சுழித்தபடி...

12 comments:

  1. ரசித்தேன் நன்று சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. சின்ன கண்ணம்மாவைக் கண்டோம். மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. வாங்க வாங்க நீங்க ரொம்ப லேட்டு....இந்நேரம் பாப்பாவைப்பற்றி எழுதி குவித்திருக்க வேண்டாமா.......?
    அனுபவக்கவிதைகள் சொல்வதில் அலாதி இன்பம் தான்.....சின்னக்கண்ணம்மா சிரிக்கிறாள்...

    ReplyDelete
  4. சின்னக் கண்ணம்மாவை ரசித்தேன்.
    த ம 3

    ReplyDelete
  5. சின்னக் கண்ணம்மாக்கள் எப்போதும் அழகுதான்.
    உங்கள் கவிதையும்.

    தொடர்கிறேன்.

    த ம கூ 1

    ReplyDelete
  6. அருமை... கண்ணு பட்ரபோகுதுமா ...

    ReplyDelete
  7. ரசித்தேன் சகோதரியாரே
    சின்னக் கண்ணம்மாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...