Saturday, 17 October 2015

இயற்கை செய்த தவறு..

இன்று கடைவீதிக்குச்செல்லும் வழியில் ஒரே கூட்டம் .அனைவரும் ஒதுங்கி நின்றனர்...விவரம் அறியாது கொஞ்சம் முன்னே சென்ற பின் தான் கவனித்தேன்.....ஒரு பணக்கார மூதாட்டி இறந்து விட்டார் போல...அவரை அவ்வளவு கொண்டாட்டமாக வழி அனுப்பி வைக்கின்றார்கள்...இருக்கட்டும் அவர்கள் பிரச்சனை அது ...அதுக்கு வழியெல்லாம் தடை செய்வதென்பது என்ன நியாயம் ..அது மட்டுமல்ல...

நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் நான்கு திசையிலும் அத்தனை பெரிய வெடி வைத்து காதைப்பிளந்தது மட்டுமல்ல...அதற்கு பின் அந்த இடம் முழுக்க குப்பையாக....எங்கும் சிதறி விதியே அலங்கோலமாக....எரிச்சல் வந்தது நமது கொண்டாட்டத்திற்காக பொது இடத்தை நாசம் பண்ணுவதை எப்போது விடுவோம்....

 யார் குப்பை போட்டார்களோ அவர்களே அக்குப்பைகளை அகற்ற வேண்டும் என சட்டம் போட்டால்  என்ன?

இயற்கை செய்த ஒரே தவறு மனிதனைப்படைத்தது தான் போல..

10 comments:

  1. உண்மைதான் சகோ பல ஊர்களிலும் இந்த தவறு நடக்கின்றது அப்பொழுதெல்லாம் நான் கோபப்பட்டு இருக்கின்றேன் யாரை நோவது...
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அப்படி சட்டம் போட எந்த மு அமைச்சரோ , பிதமரோ இல்ல இனியும் வரமாட்டாங்க??? மனசு முழுக்க வண்டி வண்டியா குப்பை வச்சிருப்பவனை படைச்சதும் தவறு!!!! .நன்றி

    ReplyDelete
  3. வாழுப் போது சோறுபோடாத வர்கள் இறந்தபின் அடக்கம் செய்ய ஆட்டம், பாட்டம் வெடி என்று செய்யும்
    அட்டகாசம் சென்னையிலும் உண்டே!

    ReplyDelete
  4. வணக்கம்

    உண்மைச்சம்பவம்.. சில இடங்களில் இப்படித்தான்.. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. உயிருடன் இருக்கையில் கவனிக்காதவர்கள்
    இறந்தபின் ஊரே அறியும் வண்ணம் இறுதி ஊர்வலத்தை
    நடத்துகிறார்கள்

    ReplyDelete
  6. பல இடங்களில் இப்படித் தான்.....

    ReplyDelete
  7. //யார் குப்பை போட்டார்களோ அவர்களே அக்குப்பைகளை அகற்ற வேண்டும் என சட்டம் போட்டால் என்ன?///

    அப்படி சட்டம் போட்டால் அந்த சட்டம் இயற்றுபவர்கள் போடும் குப்பையை அவர்கள்தானே அகற்ற வேண்டும், அதனால் அவர்கள் அந்த சட்டத்தை இயற்றமாட்டார்கள்

    ReplyDelete
  8. தன்மானத் தமிழனின் கலாச்சாரப் பண்புகளை இவ்வாறு இழிவுபடுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழனின் பிறப்புரிமை. எந்தக்கொம்பன் மு. அமைச்சராக வந்தாலும் தன்மானத் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க விடமாட்டோம்.

    ReplyDelete
  9. சுவாமி ஊர்வலத்தின் போதும் இது நிகழ்கிறது. அப்போது யாரும் குறைபடுவதில்லை. அது சுவாமி ஊர்வலம் இது சவ ஊர்வலம் அவ்வளவுதானே

    ReplyDelete
  10. பல இடங்களிலும் இப்படித்தான் சகோ தமிழ்நாட்டில்.

    கோயில் திருவிழாக்களிலும் இப்படித்தான். எந்த சமயமானாலும் இது சரியல்ல . ஆனால் நம்மூரில் சட்டம் எல்லாம் கொண்டு வர மாட்டார்கள் ...அப்படி கொண்டுவந்துவிட்டால் அப்புறம் நல்லது நடந்துவிட்டால்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...