Sunday, 27 September 2015

முழுநிலா முற்றம் -9

இன்று 27.9.15 முழுநிலா முற்றம் கூட்டம் 9 புதுகையில் உள்ள நண்பா அறக்கட்டளையில் நடந்தது.

பாடலாசிரியர் பி.கே .முத்துசாமி அவர்களைப்பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கவிதை

கவிஞர் நாகநாதன்-
பாஸ்புக்,காதல்,காணாமல் போய்விட்டேன் என்ற தலைப்புகளில் கவிதை வாசித்தார்...

ஆசிரியர் மலையப்பன் காதல்,ஆசிரியரிடம் பாராட்டு என்ற கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் செல்வா சின்னவள் பற்றிய கவிதை வாசித்தார்.

ஹைக்கூ-கவிஞர் வைகறை அம்மாவைப்பற்றி வாசித்தார்


பாடல்

கவிஞர் நீலா எஸ்.எஸ்.ஏ.திட்டத்திற்காகப்பாடப்பட்ட பாடலைப்பாடி நிலாமுற்றத்தை இனிமையாக்கினார்..அதுவரை மேகத்திற்குள் மறைந்து நின்ற நிலா மெல்ல எட்டிப்பார்த்து சிரித்தது..


நூல் விமர்சனம்-உணர்வும் உருவமும்-திருநங்கை ரேவதி

கவிஞர் கீதா திருநங்கை ரேவதி எழுதிய நூலை விமர்சனம் செய்தார்.திருநங்கைகலைப்பற்றி சமுதாயம் கொண்டுள்ள பொதுப்புத்தியை மாற்றி அவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

நிலா முற்றத்தை மேலும் எப்படி செழுமை படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்வாக கவிஞர் ரேவதியின் வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டது...












3 comments:

  1. பல நிகழ்வுகளை அருமையாக நடத்திக் கொண்டிருக்கும் புதுகை பதிவர்கள் மேல் மரியாதை பெருகிவருகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. முழுநிலா முற்றம் சிறப்பாய்...
    வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்...... இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...