Monday, 17 August 2015

நினைவலைகளில்-18.8.90-ஒரு ரோஜா பூத்த தினம்

நினைவலைகளில்-18.8.90-ஒரு ரோஜா பூத்த தினம்
-------------------------------------------------------

நாற்பது கிலோமீட்டர் பஸ்ல போய் வேலை பாக்குறியா ..அய்யய்யோ...நீ ரொம்ப வீக்கா இருக்குற ...பெட் ரெஸ்ட்ல இருந்தாத்தான் உடல் நலமாயிருக்கும் . அசையக்கூடாது வேகமா நடக்கக்கூடாது...இப்படி இருந்தா என்னிடம் வாங்க இல்லன்னா வரவேண்டாம்..கறாராக சொன்ன மருத்துவரை பார்த்து விட்டு வெளியே வரும்போது..அம்மாவிடம் அம்மா இவங்க என்னம்மா இப்படி பயமுறுத்துறாங்க..நான் நல்லாத்தானே இருக்கேன்..போம்மா..நம்மூரு டாக்டரிமே பாத்துக்கலாம்மான்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம வீட்டுக்கு வந்துட்டேன்...

தினமும் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஒருகிலோ மீட்டர்..பின் இரண்டு பஸ் ஏறி இறங்கி  இரண்டு கிலோமீட்டர் பயணம்..அரியலூரிலிருந்து சிறுவளூர் பள்ளிக்குச்சென்று வருவது என்பது...எளிமையானதல்ல ..ஏனெனில் அவ்வூருக்குள் பேரூந்து வசதியே இல்லை..

இப்படி தினமும் ஆறு கிலோ மீட்டர் நடந்து தான் சென்றேன்...ஒன்பது மாதக்கருவுடன்...
எங்கள் வீட்டில் குடியிருந்த விஜயலெட்சுமி டாக்டர் தான் என்னை கவனித்துக்கொண்டார்கள்.இளங்கோவன் நர்சிங்ஹோமில் அட்மிட் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க..அப்போது அவங்களுக்கு சொந்தமா நர்சிங்ஹோம் கிடையாது...

மேலும் அரியலூரில் அப்போது1990 ஆபரேஷன் வசதியும் இல்லை ..தஞ்சை அல்லது திருச்சிக்குத்தான் வரவேண்டும்..
நான் வேலைப்பார்த்த பள்ளியின் தலைமையாசிரியர் என்னை அவரது மகள் போல் கவனித்துக்கொண்டார்கள்...முதன் முதலாக அவர்கள் வீட்டில் தான் கேழ்வரகு கூழ் வைத்து குழந்தைக்கும் உனக்கும் நல்லதும்மா சாப்பிடுங்க என்றார்...மிகவும் கஷ்டப்பட்டு தான் சாப்பிட்டேன்.

தினமும் இளநீர் கொடுத்து குடிக்கச்சொல்வார்கள் சக ஆசிரியர்கள்.
டாக்டர் சொன்ன தேதி வந்தவுடன்...அருகில் குடியிருந்த அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மருத்துவமனை வந்தோம் ...டிரைவர் இவங்க என்ன டூருக்கு போற மாதிரி டாட்டா காட்டிட்டு வர்றாங்கன்னு...கிண்டல் பண்ணிக்கிட்டே வந்தார்.

மருத்தவமனையில் 3 பெட் இருந்தாலும் நான் மட்டுமே இருந்தேன் என்னை பார்க்கவந்த உறவினர்கள் கவலையோடு காலியாக இருந்த பெட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்..ஒரு மாமி ஏன்மா இடுப்ப சாட்டையால் அடிக்கிற மாதிரி இருக்கான்னு கேட்டாங்க ..இல்ல மாமின்னு படுத்துருந்தேன்...

டாக்டர் வந்து வலி வருவதற்கான ஊசி போட்டு சென்றார்கள்...அப்போதும் வலி வராமல் தூக்கம் வருதுன்னேன்...எல்லோரும் இவ டெலிவரிக்கு வந்தா நாம முழிச்சிட்டுருக்கோம் ..இவ என்னடான்னா தூங்குறாளேன்னு திட்டிக்கிட்டே இருந்தத கேட்டுக்கிட்டே தூங்கிட்டேன்..அவசரம்னா தஞ்சை செல்ல  வெளியே நின்றிருந்த காரில் ஏறி  காலையில் வீட்டுக்கு வந்துட்டேன்..
.வலி வந்தா வாங்கன்னு சொல்லிட்டதால...
பத்துநாள் கழித்து லேசா வலி வர அம்மா உனக்கு கார் எல்லாம் வைக்க முடியாது போ அண்ணன் கூட ஸ்கூட்டர்ல என்றார்கள்..

டாக்டர் அன்றும் வலி வருவதற்கு ஊசி போட்டுட்டு வலிக்குதான்னாங்க இல்ல டாக்டர் தூக்கம் வருதுன்னேன் ..பாரேன் இவள ..டெலிவரி நேரத்துல தூக்கம் வருதுங்குறான்னு...வெளியே நின்னுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க..

என்னுடன் இருந்த சுமதி மாமி கீதா தூங்காதன்னு முகத்துல அடிச்சிக்கிட்டே இருக்காங்க..டாக்டர் மூணு மணி நேரமா போராடுறோம் நீ கொஞ்சம் ஒத்துழைச்சா தான் உன்னையும் குழந்தையையும் காப்பாத்த முடியும்னு ...சத்தம் போடுறாங்க...

குழந்தை மேலும்கீழும்  ஏறி இறங்குது...நீ கொஞ்சம் ஒத்துழை இல்லன்னா ஆயுதம் போட்டு எடுக்க வேண்டியிருக்கும்னு பதறுகின்றார்கள்...ஒரு நர்ஸ்.நான் படுத்திருந்த பெட்டில் ஏறி என்மீது கால் வைத்தது தான் தெரியும்...
குழந்தையின் சத்தம் கேட்டது மயக்கத்தில்...என்ன குழந்தைன்னு கேட்கிறேன்..அரை மயக்கத்தில் ம்கும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..நீ செய்த அட்டகாசத்திற்குன்னு கோபித்துக்கொண்டு டாக்டர் வெளியே போயிட்டாங்க...
வெளியே பெண் குழந்தைனு சொல்ற சத்தம் கேட்டதும் மகிழ்வுடன் கண் அயர்ந்தேன்..கண்விழித்த போது ஒரு ரோஜாப்பூவை என் அருகில் படுக்க வைத்திருந்தார்கள்..
பிரசவ வலின்னா என்னன்னு இப்போதும் எனக்கு தெரியாது.ஒரு வேளை நான் இன்னும் அதிகமா வைக்கும் போலன்னு நினைத்திருந்ததால் இந்த வலியை சாதாரணமாக நினச்சிட்டேன் போல...

18.8.90 சனிக்கிழமை மதியம் 3.20 மணியளவில் என் வாழ்வின் தேவதையாய்  என் பக்கத்தில் படுத்து என்னை பார்த்து புன்னகைத்த போது....அத்தனை நேர போராட்டமெல்லாம் ..பனி போல கரைந்தது....

ஹேமான்னு பேர் வச்சு,
ஷர்மின்னு கூப்பிட்டு,
தம்பியின் நண்பன் பா  ன்னு [ஒரு வார்த்தையில் பேர் சொல்டா என்றதற்கு] கூப்பிட்டு ,
பள்ளியில் கலைநிலான்னு அழகாக அனைவராலும் அழைக்கப்பட்ட என் மகளுக்கு இன்று பிறந்தநாள்..

இன்று அவளுக்கு இருபத்தைந்தாவது ஆண்டு பிறந்த நாள்..

உங்களின் வாழ்த்துகளால் அவள் பல்லாண்டு வாழட்டும்..

வாழ்வில் வெற்றியே கிடைக்கட்டும்.



































13 comments:

  1. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சகோதரி தங்கள் மகளுக்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல்லாண்டுகள், வாழ்வில் எல்லா நலமும் பெற்று, சாதனைகள் பல புரிந்திட வாழ்த்துகள். நல்ல உயரம்! வாழ்விலும் உயரம் தொட்டிட வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வாவ்
    நல்லோதோர் நினைவலை.
    தம +
    வலிகள் சுமந்து வந்த வாரிசு ..
    அவர்கள் அன்னையை எப்போது விரும்புவார்கள் என்பதும் புரிகிறது.

    ReplyDelete
  4. பசுமையான நினைவுகள்! உங்கள் மகள் ஹேமாவிற்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்! எல்லா நலமும் பெற்று இனிதே வாழட்டும்!

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    ஒரு பெண் பிரசவிக்கும் போது அவள் மீண்டும் மறுஜென்மம் எடுக்கிறாள் என்பார்கள். தங்களின் அனுபவம் பெண்ணின் உணர்வுகளையும் தாய்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அழகான வசீகரிக்கும் நடை!

    ReplyDelete
  6. இனிய நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete
  8. தங்கள் மகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறக்கட்டும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  10. எங்கள் அருமைப் பேத்தி கலை நிலா அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் அருமை மகள் கீதா.

    ReplyDelete
  11. தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஹேமான்னு பேர் வச்சு,
    ஷர்மின்னு கூப்பிட்டு,
    தம்பியின் நண்பன் பா ன்னு [ஒரு வார்த்தையில் பேர் சொல்டா என்றதற்கு] கூப்பிட்டு ,
    பள்ளியில் கலைநிலான்னு அழகாக அனைவராலும் அழைக்கப்பட்ட


    உங்க மகளுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...