Friday, 17 July 2015

இது கூட தெரியாதா?

இது கூட தெரியாதா?
------------------------------------
முன்பெல்லாம்  குடும்ப மருத்துவர்கள் இருந்தார்கள்.குடும்ப விசயம் அனைத்தும் அவர்களுக்குத்தெரியும் ....மரணத்தருவாயில் இருப்பவர்களைக்கூட உங்களுக்கு ஒன்றுமில்லை கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறி அவர்களின் வாழ்நாளை நீட்டிப்பார்கள்.இது உளவியல் முறை....ஒருவருக்கு தன்னம்பிக்கை தான் அவரது உயிரைக்காப்பாற்றும்...

இப்போதுள்ள நன்குபடித்த மருத்துவர்கள் நோயாளியிடமே உங்களுக்கு இனி வைத்தியம் இல்லை ...அவ்ளோ தான்...ஆபரேசன் செய்தால் பெரியதொகை செலவாகும் அப்படி செய்தாலும் கொஞ்ச நாள் தான் என்று கூறி அவர்களை மனதால் சாகடித்துவிடுகின்றனர்.....

என் அம்மா மிகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்.போராட்டக்குணம் மிக்கவர்...அவருக்கு கல்லீரல் பாதிப்பு வந்த போது....அவரிடமே இப்படிக்கூறி அவரை மனதால் சாகடித்து விட்டனர்....நாங்கள் எவ்வளவோ  உங்களுக்கு ஒண்ணுமில்லமா..நல்லாருப்பீங்கம்மா...மனசால நினைங்கமா எங்ககூட வாழனும்னு என்று கதறிய போது...உதட்டைப்பிதுக்கி டாக்டர் சொல்லிட்டாரும்மா அவ்ளோ செலவு எதுக்கும்மா...நான் பிழைக்க மாட்டேன்ம்மான்னு ....முணகியபடிக்கூறிய போது தாங்கமுடியாது ..துடித்தோம்...
.அவர்கள் நம்பிக்கையைக்கொல்வது அவரையே கொல்வதற்கு சமம் என்பதை அறியாதவர்களா...இவர்கள்....என்ன படித்து என்ன நோயாளியிடமே இப்படிக்கூறுவது சரியா?

கடவுளுக்கு இணையாக மருத்துவர்களை அனைவரும் நம்பும் போது அவர்களின் உயிரில் விளையாட வேண்டாம்...

..மருத்துவ நண்பர்களுக்கு தயவுசெய்து மரணத்தின் வாசலில் நீங்கள் இருக்கின்றீர்கள் என நோயாளியிடமே கூறவேண்டாம்...

தொடர்கிறது இவ்வேதனை...


12 comments:

  1. சிலபஸ் மட்டும் படித்து
    மெடல் வாங்கி டாக்கர் ஆனால் இப்படிதான்
    வருத்தங்கள்
    தம +

    ReplyDelete
  2. உண்மைதான். இந்த வேதனையான அனுபவம் மிகச் சமீபத்தில் இன்னொரு சக பதிவுலக நண்பரின் உறவினருக்கு நேர்ந்ததை அவர் சொல்லி வேதனைப் பட்டார்.

    ReplyDelete
  3. சேவையாக நினைப்பவர்கள் இவ்வாறு சொல்வதில்லை... தொழிலாக நினைப்பவர்கள் மட்டும் இவ்வாறு...

    ReplyDelete
  4. நோயின் உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டியது மருத்துவரின் கடமை. அவர் அவ்வாறு கூறியதில் தவறில்லை. அல்லாது சும்மா பேருக்கு ஜின்செங் மல்டிவிட்டமின் போன்றவற்றை எழுதிக்கொடுத்து சும்மா நாலு தடவை வரச்சொல்லி பீஸ் வாங்குபவரதான் உண்மையில் ஏமாற்றுபவர்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அவர் தொழிலுக்கு உண்மையாக இருக்கவேண்டியது தான். அதற்காக அந்த வயதான அம்மாவிடம் அப்படி சொல்லவேண்டுமா சகோ. அவருக்கு துணையாக வந்திருப்போரிடம் இதை எடுத்துச்சொல்லி, அவரிடம் ஆறுதலாய் பேசி அனுப்பி இருக்கலாம்.

      Delete
    2. Neengal solvadu sari aanal Athai Noyaliyidam solvadu tavaru.

      Delete
  5. மருத்துவர்கள் நோயாளிக்கு தன்னம்பிக்கை தரவேண்டும்! இவர்கள் வியாபாரிகளாக மாறியது வேதனை!

    ReplyDelete
  6. இன்றைய மருத்துவர்கள் சேவை நோக்கை மறந்து நாளாச்சு.... இப்போது அவர்கள் வியாபாரிகளே அக்கா... ஆனாலும் இன்னும் சில நல்ல ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

    ReplyDelete
  7. மருத்துவம் இப்போது வியாபாரமாகிவிட்டதே. என்ன செய்வது? நாமாக தைரியமாக இருந்தால்தான் உண்டு.

    ReplyDelete
  8. எல்லாம் காசுக்காக சேவை என்பதே மறந்து போச்சு!ம்ம்

    ReplyDelete
  9. மரணாத்தின் நிமிடம் தெரிந்திருப்பது வலிமிகுந்தது

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...