Tuesday, 28 July 2015

amma

அம்மா..............
எட்டாண்டுகளாச்சு
எனைவிட்டுச்சென்று
நம்பவே முடியலம்மா

நீதான் என் தைரியம்
நீதான் என் மகிழ்வு
நீதான் என்னுயிர்
நீதான் என்வாழ்க்கை
நீதான் நான் என்பது
 உனை இழந்த பின்னே
உணர்கின்றேன்ம்மா

உன்னை காயப்படுத்திய வடு
என்னை கொல்லாமல் கொல்கிறதம்மா
காலம் உன்னிடமிருந்து என்னை
காலன் பிரித்த கொடுமை
தாங்காது துடிக்கிறேன்மா....
உன்னிடம் வரவே
உன்கை தொடவே
என் பேராசையாய்
உள்ளதம்மா...

அம்மா
வரம் கேட்கிறேன்மா
மீண்டும் நான் கருவாய்
உன்னில் பிறக்க...
என்னைச்சுமப்பாயா அம்மா....

5 comments:

  1. தங்களின் ஆசை நிறைவேறும் சகோதரியாரே

    ReplyDelete
  2. கலங்கினேன் ஆசிரியரே...

    ReplyDelete
  3. அன்னையின் அன்பு வழிந்தோடுகிறது கவிதையில்!

    ReplyDelete
  4. மனங்களில் மாறாத இடத்தைப் பெற்றவளன்றோ அம்மா!

    உங்கள் அன்னையின் நினைவுகளில் நானும் கரைந்தேன்!..

    ReplyDelete
  5. எட்டு ஆண்டு என்பது நீண்ட காலம்
    காலம் நமது வலிகளுக்கு மருந்து என்பது பொய் என்பதை உணர்ந்தேன் ..
    தம +

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...