Sunday, 31 May 2015

இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15

இன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15

காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடந்தது.பறக்கும் படை பணியில் நான் ...எனக்கு கொடுத்த அறைகளை கண்காணிக்கும் பணியில் இருந்தேன்.
மாடியிலுள்ள வகுப்பறையில் குரங்குகள்  நுழைந்து கழிப்பறையாய் மாற்றியிருந்தது .அதை துடைத்து எடுத்து பின் தேர்வர்களை எழுத கூற வேண்டியிருந்தது..வயது வித்தியாசமின்றி 55 வயது உடையவர் கூட தேர்வு எழுதினார்.
காலை 10.10க்கு ஒருவர் வேகமாக உள்ளே  நுழைந்தார்.கண்கள் இரண்டும் சிவக்க உடலில் துர்நாற்றமடித்த நிலையில் தேர்வு எழுத வந்தார்...காலையிலேயே சிறந்த குடி குடிமகனாய்...
கொஞ்ச நேரத்தில் அவருக்கு வேர்த்து வேர்த்து வடிய  மின் விசிறியை போடுங்க என்றார்...அதை போட்டதும் மின் பொறிகள் பறக்கத்துவங்கின.விடுமுறையில் தோல்வி அடைந்த மாணவர்கள்  கோபத்தில் மின்சார ஒயர்களை உருவி எரித்து...பைப்புகளை எல்லாம் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர்.அரசுப்பள்ளிதானே..

வியர்வை தாங்காமல் வெளியே வந்து அமர்ந்தார்...பின் வந்து கொஞ்சம் எழுதி விட்டு என்னால முடியல வெளியே போறேன்னார்...அப்படி நடுவில் விடக்கூடாதென்பதால் , அங்குள்ள பெஞ்சில் படுத்துக்கொண்டார்..அருகிலேயே போக முடியாத படி மதுவின் நாற்றம்....திடீரென அங்கேயே வாந்தி....கடகடவென ...

 அறை கண்காணிப்பாளர் ,நான் ,தேர்வு மைய அதிகாரி,காவலர்...இத்தனை பேராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை..நல்ல குறட்டை சத்தத்துடன் தூங்கினார்.முன் பின் அமர்ந்திருந்தவர்கள் வாந்தியின் நாற்றத்தில் எழுத முடியாது தவித்தனர்.பின் அவர்களுக்கு இருக்கையை சற்று தள்ளி கொடுத்தோம்.காவலர் வந்து அவரை புகைப்படம் எடுத்ததும் ஏன்ன்ன்னு திடுக்கிட்டு விழித்தார். மறுபடி தேர்வு எழுதும் இடத்தில் வாந்தி...28 வருட ஆசிரியப்பணியில் இதையும் சந்திக்க வேண்டிய கொடுமை.யாரை நோவது...தேர்விற்கு வரும்போதும் குடித்து விட்டு வந்தவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நாளை பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த நாற்றத்தை சகித்து கொண்டு கல்வியைத் தொடரவேண்டும்.

6 comments:

  1. என்னத்தை சொல்வது மானக்கேடு.

    ReplyDelete
  2. அடுத்தடுத்த சோதனைகள். மிகவும் தொல்லையான/வேதனையான விஷயங்கள். இதற்கெல்லாம் யார்தான் என்ன செய்ய முடியும்? கஷ்டம் ... மஹா கஷ்டம்.

    குடிப்பழக்கம் குடிப்பவருக்கு மட்டுமல்லாமல் சுற்றி இருப்பவர்களுக்கும் மஹா தொல்லைதான்.

    குடிமகன்கள் அவர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு.

    உத்யோக விஷயமாகப் போகும்போது இதுபோல எத்தனை விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது ! :(

    ReplyDelete
  3. போக வேண்டிய இடம் வேறு... (திரும்ப முடியாத இடம்...)

    ReplyDelete
  4. வேதனைதான். தவிர்க்கமுடியாதது. இவற்றையும் சமாளிக்க வேண்டுமே.

    நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
    http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

    ReplyDelete
  5. கொடுமைப்பா... இப்படிப்பட்ட மனிதர்களால் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வளவு சிரமம்? திருந்தாத ஜென்மங்கள்.

    ReplyDelete
  6. இவர்கள் எல்லாம் தேர்வு எழுதவில்லை என்று யார் அழுதது.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...