Tuesday, 21 April 2015

அட்சயதிருதியை

அங்காடிகள் நிரம்பி வழிந்தன
அட்சயத்திருதியையால்
குண்டுமணித்தங்கம் வாங்க
குறைக்கச்சொல்லிப் போராடுபவளின்

குழந்தைக்கான கல்விக்கட்டணத்தை
குறைக்காமல்  பிடுங்கும்
கந்துவட்டிக்காரனிடன் செல்லாது
அவளின் போராட்டம்..

5 comments:

  1. வணக்கம்
    அருமை.... அருமை.த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உண்மை
    இரக்கமில்லா கந்து வட்டிக் காரன்
    தம 2

    ReplyDelete
  3. அட்சய திருதியை - அது
    தொலைக்காட்சி, நகைக்கடைக் காரர்களின் கூட்டுவிழா.
    விழிப்பாய் இருக்க வேண்டிய மக்கள் விழிபிதுங்குகிறார்கள்

    ReplyDelete
  4. அருமை கீதா..இப்பொழுதெல்லாம் முகநூலில் உங்கள் பதிவுகளைப் பார்த்துவிடுவதால் இங்கு வர வாய்ப்பில்லாமல் போய்விட்டது .. :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...