Tuesday, 16 December 2014

பாகிஸ்தானில்

அந்த மாமா
அன்புடன் அழைச்சாக
ஐஸ்கிரீம் தரத்தான்னு
நினைச்சேன்மா...

உடல் சிதற
உறுப்புகள் பறக்க
உதிர்த்ததேனம்மா..

பயத்தில் மேசைக்கு அடியில்
நானும் நண்பனும்
ஏம்மா சுட்டாங்க
என் தோழர்களை..?

மனிதர்கள் மிருகங்களா
மாறியதை கூறாமல்
மறைத்ததேனம்மா...!

7 comments:

  1. குழந்தைகளைக் கொன்ற கொடூரர்கள்...
    ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டிகள்...
    கேடு கெட்டவர்களுக்கு கேடு வரும்.

    ReplyDelete
  2. ஆம், வேதனையான நிகழ்வு.

    ReplyDelete
  3. இவர்களை எல்லாம் மிருகங்கள் எனச் சொல்வது, மிருகங்களை அவமதிக்கும் செயலாகும்
    மதத்தின் பெயரால் இப்படியா?

    ReplyDelete
  4. மிகவும் வேதனையான நிகழ்வு. !!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...