Sunday, 30 November 2014

துணையாடல்


நண்பகலில் நல்லிரவு...
பாடம் மறுத்து
விரித்த விழிகளுடன்
இணைந்து பாடிய
குழந்தைகளின் இசையில்
பேரிரைச்சலுடன் நர்த்தனமாடிய
உயிர்த்துளிகளின் தோரணங்கள்...
பலகணியில் புகுந்து
பச்சிளம் குழந்தைகளை துழாவி
அழைத்தது துணையாட...

8 comments:

  1. பச்சிளம் குழநதிகளின் துணையாடல் எப்பொழுதுமே இனிதுதான்/

    ReplyDelete
  2. கவியாடல் எம்மையும் அழைத்ததே... அருமை.

    ReplyDelete
  3. பகலில் ஒரு மழையா!

    ReplyDelete
  4. இதமான மழைச்சாரல்...

    ReplyDelete
  5. அழகிய கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...