Friday, 21 November 2014

நான் கலெக்டராவேன் டாக்டர்...

நான் கலெக்டராவேன் டாக்டர்...

டாக்டர் என்னை குணப்படுத்திவிடுங்க நான் நிறையப்படிக்கனும் கலெக்டராகனும்..

.சத்யா...ஹோம்வொர்க் பண்ணிட்டியா...படம் வரஞ்சிட்டியா....அந்த பாடத்த படிச்சிட்டியா...
எனதூங்காது புலம்பி துடித்தவளிடம்
ஏம்மா இவ்வளவு நல்ல பிள்ளையா படிக்கனும் கலெக்டரா ஆகணும்னு எல்லாம் சொல்றியே ஏம்மா இப்படி பண்ணுன ..?

தெரியாம பண்ணிட்டேன் டாக்டர்...எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க டாக்டர் ..எங்க டீச்சர்  எனக்கு அனுமதி கொடுப்பாங்க நான் தேர்வு எழுதிடுவேன் டாக்டர்..

அக்கா நான் நல்லா வந்துடுவேன்கா...அம்மாவ இனி கவலப்படவிட மாட்டேன்கா...

ஹலோ டீச்சர்...நான் நல்லா வந்துடுவேன் டீச்சர் ...போன வருடம் முதல் மார்க் வாங்குன நந்தினியவிட 2 மார்க்காவது கூட வாங்கிடுவேன் டீச்சர்...

கலெக்டர் ஆனா நாங்க எல்லாம் உன்னப்பாக்க கியூல நிக்கனும் தானே என்ற டீச்சருக்கு நீங்க வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சா நானே ஓடி வந்து காலில் விழுந்து வணங்குவேன்னு ஆரம்பத்தில் சொன்னவள்...

வியாழக்கிழமைனா மாமா பூ வாங்கிட்டு வந்துடுங்க...வெள்ளிக்கிழமை நான் பூ வச்சிட்டுதான் போவேன்...

ஏம்மா பசங்க கிட்ட அடி வாங்குறதுக்குன்னே வருவியான்னு ...என்ற அக்கம் பக்கத்தில் கேட்பவர்களுக்கு புன்னகையே பதிலாய்த் தந்து சிட்டாய் பறந்தவள்....

அருகிலிருக்கும்...கோவிலுக்கு தினந்தோறும் சென்று கடவுளை வணங்கி பாடலைப்பாடி வழிபட்டவள்..

 மருத்துவர்களே கண்ணீர்விட்டு கதறி அழும்படி புலம்பி புலம்பி 23 நாட்களாய் தண்ணீராய் உடல் கரைய..கரைந்து..கரைந்துவிட்டாள்..

ஆசிரியர்கள், தோழிகள்,உறவினர்கள்,
தெருவே அன்பால் கண்ணீர் வடியக் காரணமாய்...நெருப்பில் குளித்து தன்னைக்கரைத்து தாயின் வயிறெரியக் காற்றில் கலந்தாள்...பவானி..

இன்று பத்தாம் வகுப்பு மாணவிகளில் ஒருத்தி இல்லை..உண்மை...நிகழ்வு 

 .

24 comments:

  1. அடப்பாவமே! இது நடந்த செய்தியா? கற்பனை கலந்ததா? முழுவிவரம் தெரியலயே? பின்னணி என்ன? அதுவல்லவா முக்கியம்? எழுதுவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார் கொஞ்சம் பிடிவாதமானவள்...பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ...வாங்கி வைத்த இட்லியை அக்கா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பிட்டு விட்டாளென சண்டையில் அம்மா திட்டிவிட்டார்களென்பதால் எடுத்த முடிவு..சார்.

      Delete
    2. அமிக்டாலா படுத்தும் பாடு ...

      Delete
  2. பவானியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  3. வணக்கம்
    படிக்கும் போது மனம் கனத்தது.... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஒரு சின்ன தீபொறி அந்த அழகிய மலரை கருக்கி விட்டதே:(( மாணவர்கள் உணர்வுகள் கையாள நாம் பழக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா...கையறு நிலையில்

      Delete
  5. இது போலான சம்பவங்கள் நிறையவே நடக்கிறதுதான்/காலத்தின் கொடுமை இது என்பதை விட சூழலும் ஒரு பெரிய காரணியான விபத்தாய்/

    ReplyDelete
  6. உண்மை நிகழ்வோ, கற்பனையோ என்னவென்று புரியவில்லை. படித்து முடித்ததும் மனம் அதிகமாக கனத்தது.

    ReplyDelete
    Replies
    1. நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார் கொஞ்சம் பிடிவாதமானவள்...பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ...வாங்கி வைத்த இட்லியை அக்கா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பிட்டு விட்டாளென சண்டையில் அம்மா திட்டிவிட்டார்களென்பதால் எடுத்த முடிவு..சார்.

      Delete
  7. தற்கொலை நிகழ்வுகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. மனத்துணிவை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனை ஒரு பாடமாக குழந்தைகளுக்கு எப்படி வைப்பது?

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வதென புரியல..சார்

      Delete
  8. Replies
    1. நடந்தது வீட்டில் நடந்த சிறு சண்டை தான் காரணம்..சார் கொஞ்சம் பிடிவாதமானவள்...பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ...வாங்கி வைத்த இட்லியை அக்கா வேலைக்கு போகும் அவசரத்தில் சாப்பிட்டு விட்டாளென சண்டையில் அம்மா திட்டிவிட்டார்களென்பதால் எடுத்த முடிவு..சார்.

      Delete
  9. ம் ..வருத்தமாக இருக்கிறது..

    ReplyDelete
  10. உணர்வு மேலாண்மை குறித்து அவசரமாக ஒரு பயிற்சியைத் தாருங்கள் ..
    நீங்கள் இட்லியாக இருங்கள் படிங்கள் மாணவர்களிடம் பகிருங்கள் ..

    ReplyDelete
  11. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  12. மது அவர்கள் முதலில் சொல்லியதே! அதே போன்று நாங்கள் சொல்ல வந்ததை மது அவர்களும், மைதிலி அவர்களும் சொல்லி விட்டார்கள். ஆம்! முன்பெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள், யங்க் ஸ்டூடன்ட் மூவ்மென்ட் என்ற வகுப்புகள் இருந்தன. அதில் நம் மனதை எப்படித் திறம்படக் கையாள வேண்டும் என்றும், மனதை ஒரு நிலைப்படுட்துவது எப்படி என்றும், உணர்வுகளைக் கையாண்டு அதன் மேலாண்மைக் குறித்த வகுப்புகள் எங்களுக்கு இருந்தன. அவை இதோ இன்று வரை மிகவும் உபயோகமாக இருந்து வருகின்றன. இப்போது எமக்குத் தெரிந்து அது போன்று பள்ளிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஒரு சில பள்ளிகளில் இருக்கலாம். இதைப் பற்றியும் ஒரு பதிவு தயாராகிக் கொண்டு இருக்கின்றது.

    ReplyDelete
  13. இட்லிக்காக தீவைத்துக் கொண்டாள் என்ற பகிர்வு பார்த்தபோதே வருத்தமாக இருந்தது. இப்போது...

    இதுபோல் இனி நடவாதிருக்க வேண்டும். அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்....

    ReplyDelete
  14. இக்கால பிள்ளைகள்....அவசரப்படுகிறார்கள்
    வேதனை....நிகழ்வு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...