Friday, 26 September 2014

-வேண்டாம் விடுமுறை...

வேண்டாம் விடுமுறை...

இன்று பள்ளியின் முதல் பருவ நிறைவுத்தேர்வு....முடிந்தது..இனி 6ஆம் தேதிதான் பள்ளிக்கூடம் திறப்பு...

யாரெல்லாம் சந்தோசம்மா வீட்டுக்கு போகப்போறீங்க கை தூக்குங்கன்னதும் ...எல்லா குழந்தைகளும் அமைதியா...ஏய்ய் ..பொய் சொல்லாம சொல்லு ...யாரு வருத்தமா போறீங்கன்னதும் எல்லாரும் கைதூக்கினார்கள்....

ஏன்டாம்மா வீடு பிடிக்கல காரணம் சொல்லுன்னு சொன்னதும்..

*வீட்ல அம்மா வேலைக்கு போய்டுவாங்க தனியா இருக்கனும் என் ஒரு குரல்..

*எப்ப பார்த்தாலும் வேலை செய்யலன்னு திட்டிக்கிட்டே இருப்பாங்க,செய்யலன்னா அடிப்பாங்கன்னு ஒரு குரல்....

*டி.வி.யே பார்க்க கூடாதுன்னுவாங்க நாங்க என்னதான் செய்றதுன்னு ஒரு குரல்

*நண்பர்களையெல்லாம் பாக்க முடியாது கஷ்டமாருக்கு டீச்சர்னு ஒரு குரல்...


*போரடிக்கும் டீச்சர்னு ஒரு குரல்...


மொத்தத்தில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே விரும்புகின்றனர்...ஆனா இதில் பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் விதிவிலக்கு...எப்ப பார் படிபடின்னு முடியல டீச்சர்னு அவர்களின் புலம்பல்...

யாரும் விடுமுறைக்கு ஊருக்கு போகலயான்னு கேட்டதும் ஒருவர் கூட போகலன்னாங்க ...

 குழந்தைகள பாத்துக்குறது பெற்றோர்களுக்கே தொல்லையான ஒன்றாயிருக்கும் போது...மற்ற பிள்ளைகள் வருவதையும் அவர்களின் சேட்டைகளையும் பொறுத்துக்கொள்ள உறவுகள் தயாராக இல்லை...

விடுமுறை வரும் முன்பே மூட்டைய கட்டிக்கொண்டு சொந்தங்களின் வீடுகளுக்கு படை எடுத்த காலம் மறைஞ்சு போச்சு...

மேலும் இப்ப பெண்குழந்தைகளை நம்பி அனுப்பக்கூடிய சூழ்நிலையும் இல்லை...

குழந்தைகளின் சுறுசுறுப்புக்கு தீனி கொடுக்க நம்மால் முடிவதில்லை..போரடிக்கும் என்ற குழந்தைகளின் வார்த்தைகளில் எத்தனை உண்மை இருக்கின்றதோ...அத்தனை உண்மை..சமாளிக்க முடியலன்னு வேதனைப்படும் பெற்றோர்களின் நிலை...

எத்தனை அன்பா சொல்லியும் கேட்காத மாணவிகள்.கூட....கண்டித்தாலும் பரவால்ல டீச்சர் பள்ளிக்கூடத்துக்கே வர்றோம்னு சொன்ன போது...என்ன சொல்வதுன்னு தெரியல....வீட்டை விட்டு குழந்தைகள் விலக ஆரம்பிக்கின்றனரோன்னு தோன்றியது...

இன்னும் பத்து நாளைக்கு பாவம் குழந்தைகளும் பெற்றோர்களும்...!

10 comments:

  1. அந்தக் காலத்தில் இப்படியா? எங்கடா லீவு விடுவாங்கன்னு காத்திருந்து, ஊரு உலகம் எல்லாம் சுற்றுவோம். அப்பா ஆபீஸ் போனாலும் அம்மா வீட்டில்தான் ..இருப்பாங்க. ம்ம்ம்... பாவம்தான் இந்தக் காலக் குழந்தைங்க...

    ReplyDelete
  2. ///விடுமுறை வரும் முன்பே மூட்டைய கட்டிக்கொண்டு சொந்தங்களின் வீடுகளுக்கு படை எடுத்த காலம் மறைஞ்சு போச்சு...///
    உண்மைதான் சகோதரியாரே

    ReplyDelete
  3. உண்மைதான்,... இந்தக் கால குழந்தைகளுக்கு உறவுகளோடு சந்தோஷமாக இருக்க வழி இல்லைதான்... காரணம் உறவுகளை எல்லாம் தள்ளி வைத்து வாழ ஆரம்பித்து விட்டோம்.. நமது பள்ளிக் காலங்களில் எல்லாம் விடுமுறை தினம் என்றால் ஆயா வீடு, சித்தி வீடு, பெரியம்மா வீடு என போய்க் கொண்டிருப்போம்... இப்போது செல்போன், தொலைக்காட்சி, கணிப்பொறி என உறவுகள் சுருங்கி வாழ்க்கை அறைக்குள் வந்துவிட்டது...

    ReplyDelete
  4. லீவு எப்போ வரும் என்று ஏங்கிய காலம் போய் லீவு வேண்டாம் என்கிற காலம் வந்து விட்டதா? ஹாஹாஹா!

    ReplyDelete
  5. இப்போது இப்படித்தானோ? எங்கள் வீட்டில் சிறுவர் இல்லாததால் தெரியவில்லை! வளர்ந்து விட்டார்கள்! சிறுவர்களாக இருந்த போது எப்போ விடுமுறை வரும் என்று ஏங்குவார்கள்! ம்ம் இப்போது காலம் மாறி விட்டதோ?!!! ஒன்று உறுதி! இப்போது குழந்தைகளுக்கு உறவுகளுடன் இணையும் பாலம் இல்லை! தனித் தனித் தீவுகளாக மாறிக் கொண்டிருக்கின்றது சமூகம். நல்ல உணர்வு பூர்வமான பதிவு!

    ReplyDelete
  6. ஹ ஹா ...
    வித்யாசமான குழந்தைகள்

    ReplyDelete
  7. இக்கால குழந்தைகள் நிலையும்
    பெற்றோரின் நிலையும் ...
    பாவம்தான்!!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு...

    உங்களை ஐம்பதாவது நண்பராக தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி .......

    ReplyDelete
  9. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் பதிவு. நன்றி.

    ReplyDelete
  10. நிறைய குழந்தைகளுக்கு வீடு மகிச்சி தரவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்திதான். சிந்திக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...