Thursday, 31 July 2014

குழவி5



இல்லாத காக்கை
போடாத உணவை
தூக்கிப்போனதாய் கூறி
குழந்தைக்கு உணவூட்டும்
 நிகழ்படத்தின்
கதை,திரைகதை,வசனம்
நடிப்பு,என பன்முக அவதாரம்
தாய்க்கு......

வாய்க்குள் உணவை
விழுங்காமலும்,துப்பாமலும்
திணறும்குழந்தையின்
 குறும்பை ரசித்து
பறக்கும் தும்பி
பார்வையாளரென.....






5 comments:

  1. குழந்தையை ஏமாற்றும் தாய் அருமை.

    ReplyDelete
  2. வணக்கம்
    வரிகளை இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான காட்சி விவரிப்பு!

    ReplyDelete
  4. அழகு!!
    குழந்தை போலவே:))

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...