Wednesday, 25 June 2014

குழவி2

ஒருமுடி இழுப்பட்டாலே
ஓவென அலறும் மனம்

இரு கையால்
கொத்தோடு பிடித்து
 மிதிமிதியென மிதித்து
புத்தாடையை நனைத்து
 முகத்தில் உமிழ்ந்து
உண்ணும் உணவை எத்தி
அழவும் கூடாதென
ஆட்டிப்படைக்கிறது
பொக்கைவாய்ப்பூ மலர.
மனதைத் திருடியபடி.....

1 comment:

  1. மழலை போலவே கவிதையும் அழகு. :-)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...