Sunday, 18 May 2014

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும்

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும் 

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழாசிரியர் கழகம் சார்பாக இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை 17,18.05.2014 (சனி, ஞாயிறு) இரு தினங்களும் நடைபெற்றதை நண்பர்கள் நன்கறிவீர்கள்.

 

முதல் நாள் நிகழ்வு

திரு. முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர்- புதுக்கோட்டை)தலைமையேற்று தொடங்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார்.
பின்னர் கலந்து கொண்டவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். நண்பர்களின் பெயரை சொடுக்கினாலே அவரவர் வலைப்பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் அமைத்துள்ளேன்.
திரு. முனைவர். மு.பழனியப்பன்  (சிவகங்கை கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர்) அவர்கள்
1.ஜிமெயில், வலைப்பக்கம் எப்படி தொடங்குவது?
2.வலைப்பக்கம் தொடங்க என்ன தேவை?
3.தொடங்கிய வலைப்பக்கத்தை எவ்வாறு அழகுபடுத்துவது?
4.தமிழில் எழுத எந்தெந்த மென்பொருளைப் பயன்படுத்துவது போன்ற தலைப்புகளில் சிறப்பானதொரு வழிகாட்டுதலைத் தந்தார்.  



புதுக்கோட்டை மாநகரில் வசிக்கும் சர்மா நண்பர்கள் (சர்மா சொல்யூசன்ஸ்)எனும் தமிழ்த்தட்டச்சு நிறுவனம் எண்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்து பயிற்சி அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

முதல்நாள் சிறப்பு விருந்தினர் திரு.முனைவர்.மதிவாணன் (திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்)சிறப்புரை ஆற்றினார். அதில் எழுத்தாளர்களுக்கு சங்க இலக்கியத்து மொழிநடை தான் வேண்டுமென்று அவசியமில்லை தங்களின் இயல்பான மொழியால் எழுதினால் போதும் எழுதினால் தவறு வந்து விடுமோ என்று தயங்கி நிற்பதை விட ஒற்றுப்பிழை வந்தாலும் பரவாயில்லை எழுதுங்கள் என்றும், எழுத்தில் சமகால போக்கு இருக்க வேண்டுமென்றும் இயல்பான மொழியில் எழுதுங்கள் ஆனால் மொழிப்பற்றிய பொறுப்பு வேண்டும் எனும் கருத்துகள் அடங்கிய உரை மொழியில் தெளிந்த அறிவையும், முதிர்ச்சியையும், நிதானத்தையும் உணர்த்தியது. அவரோடு நண்பர் திரு.ஜோசப் விஜீ அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்

பின்னர் அனைவரும் கணினி முன் அமர்ந்து வலைப்பக்கம் உருவாக்கம் மற்றும் தொடங்கிய வலைப்பக்கத்தை செம்மைப்படுத்தும் பயிற்சி நடந்தது. இதில் 20 புதிய வலைப்பக்கங்களும், 15 ஏற்கனவே தொடங்கிய வலைப்பக்கங்கள் செம்மைப்படுத்தப்பட்டன.

               (திரு.கவிஞர்.முத்துநிலவன் ஐயா அவர்கள் பேசிய காட்சி)

இரண்டாம் நாள் நிகழ்வு

முனைவர் திரு. அருள்முருகன் அவர்கள் நட்ட கல்லும் பேசுமே எனும் தலைப்பில் ராசராசன் பெருவழி பற்றிய பண்டைய வழித்தடம் பற்றி பழமையான மைல்கல்களை ஆதாரமாக வைத்து நீண்ட ஆய்வு செய்து பழங்காலத்து வழித்தடத்தை விளக்கி ஆய்வினை சமர்பித்தார்.
விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி எனும் தலைப்பில் திரு.பிரின்சு என்னாரெசுப்பெரியார் (விக்கி-தமிழ் சென்னை)அவர்கள் சிறப்பான சிறுகுழந்தைக்கு கூட புரியும் வண்ணம் வகுப்பெடுத்தார். எளிய முறையில் புரியவைத்து எங்களது மனங்களில் விக்கிபீடியா மீது இருந்த பிரம்மாண்டத்தைத் தவிடுபொடியாக்கி சென்றார்.
5.வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகர்களை ஈர்ப்பது எப்படி?
6.வணிக நோக்கில் இணையத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
7.புகழ்பெற்ற இணைய இதழ்கள், திரட்டிகள், வலைப்பக்கங்கள் பற்றிய அறிமுகம்
8.வலையுலகில் எதைச் செய்யக்கூடாது?
ஆகிய தலைப்புகளில் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும், மூங்கில் காற்று திரு. டி.என்.முரளிதரன் அவர்களும் வகுப்பெடுத்தார்கள். தஞ்சைத்தமிழ் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளரர்க பணிபுரியும் திரு.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் வருகை தந்து சிறப்புரையும் ஆற்றினார்.

படத்தில் இருப்பவர்கள் இடமிருந்து வலம்
1.திரு.ஜம்புலிங்கம் ஐயா
2.திண்டுக்கல் தனபாலன் 
3.மூங்கில் காற்று திரு. டி.என்.முரளிதரன்
4.திரு.அ.பாண்டியன்,
5.திரு.கவிஞர் முத்துநிலவன்,
6.திரு.கஸ்தூரிரெங்கன்,
நிற்பவர்களில் இடமிருந்து வலம்
7.திரு.குருநாதசுந்தர்,
8.திரு.கரந்தை ஜெயக்குமார்,
9..திரு.மகாசுந்தர்,
10.திருமதி.கவிஞர் கீதா,
11.திருமதி.மாலதி

படம் எடுத்தவர்

படம் எடுத்தவர்
12.திரு.திருச்சி தமிழ் இளங்கோ 

படத்தில் இல்லாதவர்கள் ஆனால் வருகை புரிந்தவர்கள்

14.திருமதி.கவிஞர் சுவாதி

பதிவர் சந்திப்பா!


தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு உன்னதமான இப்பயிற்சிக்காக பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்த பதிவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்தது இது பயிற்சியா? பதிவர்களின் மினி மாநாடா? எனும் ஐயம் எழுந்திருக்கலாம். அவ்வாறு கலந்து கொண்டஅனைத்து பதிவர்கள்களுக்கு நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்களோடு பகிர்ந்து கொண்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும் பயனுள்ளதாகவும், என்னை மென்மேலும் மெருகேற்றி வளர்த்துக் கொள்ளவும் பேருதவியாக இருக்கும் எனும் மகிழ்ச்சியோடு உங்களோடு பகிரும் நண்பன் அ.பாண்டியன். நன்றி


சகோதரர் பாண்டியன் பதிவை இங்கு பதிகிறேன்.நன்றி சகோ

 

5 comments:

  1. பகிர்ந்தது அருமை...

    ReplyDelete
  2. சற்று முன் சகோதரர் தளத்திலும் கண்டேன்... உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete

  3. சகோதரிக்கு நன்றி! நானும் எனது பங்கிற்கு புதுக்கோட்டை இணையப் பயிற்சி குறித்து ஒரு பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சிநன்றி தோழி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
    இந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
    உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
    நிகழ்வை நடத்தியோர்
    நிகழ்வின் பங்காளிகள் என
    எல்லோருக்கும் நன்றிகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...