Monday, 19 May 2014

உலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்!

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும்
 தென்றல் சமூகநல அறக்கட்டளை
இணைந்து நடத்தும்

உலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்!

நாள்;மே 22,23,24,25 காலை 9.00மணி
இடம்:மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளி,அண்ணாநகர் மேற்கு,சென்னை.

கவியரங்கை தொடக்கி வைத்து சிறப்புரை:
     
           உயர்திரு உ.சகாயம் இ.ஆ.ப. அவர்கள்

இக்கவியரங்கைப் பற்றி கவிஞர். பொன்னையா அவர்கள் 2013 ஆம் வருடக் கடைசியில் கூறி நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதன் பேரில் என் கவிதைகளை அனுப்பி வைத்தேன் தேர்வாகும் கவிதைகளையே கவியரங்கில் படிக்க முடியும் என்பதால்.”.எங்கே போவேன்”,கவிதையை மெய்ப்புத் திருத்தும் பொழுதே என்னிடம் மிகவும் நன்றாக உள்ளதென கூறினார்கள்.

23ஆம் தேதி அன்று என் கவிதைகளைப் படிக்க அழைத்துள்ளனர்.
என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அன்று அமையும் .இதற்கு என்னை அறிமுகம் செய்த கவிஞர் .பொன்னையா மற்றும் என் கவிதைகளைத் தேர்ந்தெடுத்த கவியரங்க அமைப்புக்குழுவினருக்கும் என் மனம் நிறைந்த நன்றிதனை உரித்தாக்குகின்றேன்.


5 comments:


  1. நிகழ்வு இனிதே இடம்பெற எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழி! சாதித்துவிட்டுவாருங்கள்.

    ReplyDelete
  3. மிகவும் மகிழ்ச்சி... அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமையானதோர் வாய்ப்பு. வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  5. உலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கில் தன்னுடைய பங்கினை அளிக்கச் செல்லும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...