Wednesday, 19 March 2014

மனு

காலில் பிறந்தோன்
உந்தியில் உதித்தோனுக்கும்

உந்தியில் பிறந்தோன்
மார்பில் பிறந்தோனுக்கும்

தீட்டெனெ தீயிட்டுக் கொள்கிறார்கள்

மூடர்களே மூவருமே தீட்டு
நெற்றியில் பிறந்தோனுக்கு

இந்து தர்மத்தின்
உயிர்நாடி இதுவே.... ?!

சாதி வேரை
அடியோடு தகர்க்க
எரிக்கும் எரிமலையாய்
வெண் தாடி கிளம்ப
தணலின் வெப்பம்
தாக்காமலிருக்க

அவரை
கடவுளின் எதிரியாய்
சித்தரித்தே

குளிர்காயும் ஓரினம்
உண்மையறியா தமிழினம்....

5 comments:

  1. தமிழினம் உண்மை அறியாததுதான்

    ReplyDelete
  2. உண்மையறியா தமிழினம் -- உண்மைதான்

    ReplyDelete
  3. மன்னிக்கணும் தோழி... நல்ல கவிதையைக் கூடத் தாமதமாகப் பார்க்க நேர்ந்தமைக்கு. அரசியல், சமூகவியல் பாடும் பெண்கவிகள் மிகவும் குறைவு என்று நான் முன்பே (உங்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில்கூட) குறிப்பிட்டிருக்கிறேன். இதுபோலும் அதிரடிக் கவிதைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன... அருமை! மிகச்சிறந்த கருத்து... இன்னும் கொஞ்சம் அழகியல் சேர்த்து எழுதுங்கள்... அட அழகியலில் சிறந்த பல கவிதைகள் என்னத்தச் சாதிச்சன? நீங்கள் எழுதுங்கள்.. நன்றி

    ReplyDelete
  4. முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே,
    மார்பில் பிறப்பதுண்டோ மடையனே,
    தொடையில் பிறப்பதுண்டோ தொழும்பனே,
    காலில் பிறப்பதுண்டோ கசடனே - பாரதிதாசனின் பொறிபறக்கிறது!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...